“முன்னணி நிர்வாகிகளைத் தூக்குங்கள்…” அமைச்சர்களுக்குப் பறந்த கிரீன் சிக்னல்.. திமுக வியூகத்திற்கு CM விஜய்யின் மாஸ்டர் பிளான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முன்னணி நிர்வாகிகளைத் தூக்குங்கள்…” அமைச்சர்களுக்குப் பறந்த கிரீன் சிக்னல்.. திமுக வியூகத்திற்கு CM விஜய்யின் மாஸ்டர் பிளான்..!!

Published

on

சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த ரகசிய ரிப்போர்ட் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் முன்னணி நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்குமாறு கட்சியின் அனுபவமிக்க அமைச்சர்களுக்கு அவர் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதனையடுத்து, திமுக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தவெக-வில் இணைந்தால் தங்களுக்கு உரிய அங்கீகாரமும், பிரதிநிதித்துவமும் கிடைக்குமா என்ற சந்தேகம் இருப்பதால், திமுக நிர்வாகிகள் கட்சி மாறுவதற்குத் தயக்கம் காட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in