இனி கைவெச்சா அவ்வளவுதான்.. எல்லை தாண்டி தான் ஆட்டம்.. அமெரிக்காவை அலறவிட்ட ஈரானின் அடுத்த அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி கைவெச்சா அவ்வளவுதான்.. எல்லை தாண்டி தான் ஆட்டம்.. அமெரிக்காவை அலறவிட்ட ஈரானின் அடுத்த அறிவிப்பு..!!

Published

on

ஹார்முஸ் அருகே ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள கெஷ்ம் தீவில் செயல்பட்டு வந்த IRGC ஏவுகணை ஏவுதளத்தின் மீது, அமெரிக்க போர் விமானங்கள் சில தினங்களுக்கு முன்பு கடும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. அந்தத் தாக்குதலால் கெஷ்ம் தீவின் வடமேற்கு பகுதிகளில் 5 முதல் 6 முறை மிகப்பெரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், அது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதன்படி, குவைத்தின் அலி அல் சலீம் பகுதியில் உள்ள விமானப் படைத் தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஆகிய இரண்டு முக்கிய ராணுவ தளங்கள் மீதும், ரேடார் மையங்கள் மீதும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களைத் தாங்கள் முறியடித்துவிட்டதாக சவுதி மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. அதேநேரம், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) ஆகியவை ஈரானின் தாக்குதல் வளைகுடாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement

இந்தக் கண்டனங்களுக்குப் பிறகு, எதிரிகள் மீண்டும் தாக்குதல்களைத் தொடர்ந்தால் புவியியல் எல்லைகளைத் தாண்டியும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கி வந்த ஈரான், தற்போது புவியியல் எல்லைகளைத் தாண்டித் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியிருப்பதால் அமெரிக்காவில் நேரடித் தாக்குதல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசியில் ‘Dirty Bomb’ தாக்குதலை நடத்த ஈரான் முயற்சிப்பதாகச் சமீபத்தில் அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததும், அது நடந்தால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in