LATEST NEWS
“மனித இனமே அழிஞ்சிடும்” வாஷிங்டனில் கதிரியக்க குண்டு வீச ஈரான் சதி..? அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் ரகசியத் திட்டம்… டிரம்ப் பகீர் எச்சரிக்கை…!!
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் நகரில் கதிரியக்க குண்டு தாக்குதல் நடத்த ஈரான் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான உளவுத்துறை தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், இதுவரை எந்த நாடும் சந்திக்காத அளவுக்கு கடுமையான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்று அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள அமெரிக்க அதிகாரிகள், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் உலக அளவில் பெரும் போருக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளனர். வாஷிங்டன் அல்லது அமெரிக்க நகரங்களை குறிவைத்து தாக்கினால் அது முழு அளவிலான போராக வெடிக்கும் எனவும், அமெரிக்கா தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரானிய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளின்படி, வாஷிங்டன் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் ஆதாரமற்றவை என நிராகரிக்கப்பட்டுள்ளது.
