இப்படியும் ஒரு கொடூரத் தந்தையா..? மனைவி வீட்டுக்கு வராததால் 3 வயது பிஞ்சு குழந்தைக்கு விஷம் கொடுத்த அரக்கன்.. நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

இப்படியும் ஒரு கொடூரத் தந்தையா..? மனைவி வீட்டுக்கு வராததால் 3 வயது பிஞ்சு குழந்தைக்கு விஷம் கொடுத்த அரக்கன்.. நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் பகுதியில், மனைவி தீபாவளிப் பண்டிகைக்கு வீட்டிற்குத் திரும்பாத ஆத்திரத்தில் தந்தை தனது 3 வயது மகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகித் சிங் என்பவரே தனது சொந்த மகள் ருச்சிகாவிற்கு விஷம் கொடுத்து இந்தக் கொலைச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

மோகித் சிங்கின் மனைவி சுசீலா, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையன்றும் அவர் கணவர் வீட்டிற்குத் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த மோகித் சிங், தனது மூன்று வயதுப் பெண் குழந்தையான ருச்சிகாவிற்கு விஷம் கொடுத்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தை, சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தது.

Advertisement

குழந்தைக்கு விஷம் கொடுத்த பிறகு, காவல்துறையினர் தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் மோகித் சிங்கும் விஷம் அருந்தித் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அவரை மீட்ட அருகிலுள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in