“எனக்கு வேலை இருக்கு,, பேச முடியாது…” டெல்லி விழாவிற்கு அழைக்கப் போன் செய்த ராகுல் காந்தி..? ஸ்டாலின் செய்த செயலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கு வேலை இருக்கு,, பேச முடியாது…” டெல்லி விழாவிற்கு அழைக்கப் போன் செய்த ராகுல் காந்தி..? ஸ்டாலின் செய்த செயலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

Published

on

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் செல்போன் அழைப்பைத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாகத் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தற்போது தவெக கூட்டணியில் இணைந்து ஆட்சியில் பங்கேற்றுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற நிலையில், இந்த விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக ராகுல் காந்தி அலுவலகத்திலிருந்து மு.க.ஸ்டாலினுக்குத் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தனக்கு வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் ராகுல் காந்தியிடம் பேச முடியாது எனக் கூறிய ஸ்டாலின், புத்தக வெளியீட்டு விழாவிற்கு மட்டும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

சட்டமன்றத் தேர்தல் விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாகவே ராகுல் காந்தியுடன் பேச மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை எனத் தெரிகிறது. இந்தச் சம்பவம், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி முழுமையாக முறிந்துவிட்டதையே வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in