“புது வீடு பார்க்கப் போகலாம் வா..” கணவனை நம்பி பைக்கில் ஏறிய இளம்பெண்… ஆள்நடமாட்டமில்லாத காலி இடத்தில் நடந்த பயங்கரம்..! விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“புது வீடு பார்க்கப் போகலாம் வா..” கணவனை நம்பி பைக்கில் ஏறிய இளம்பெண்… ஆள்நடமாட்டமில்லாத காலி இடத்தில் நடந்த பயங்கரம்..! விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சின்னபாலத்து தெருவைச் சேர்ந்த 26 வயதான லாரி மெக்கானிக் கணேசனுக்கும், 21 வயதான ரசிகாவுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்று, 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணேசனின் குடிப்பழக்கத்தால் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கணவரைப் பிரிந்த ரசிகா அதே தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் இருவரும் சமாதானமாகப் பேசியதுடன், முன்பு வசித்த வீட்டில் பாம்புத் தொல்லை இருப்பதால் வேறு வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். அதற்காக முன்பணமாக ரூ.5,000 கொடுத்திருந்த நிலையில், மீதமுள்ள ரூ.10,000 பணத்தை வாங்குவதற்காக நேற்று (நவம்பர் 16) காலை 10.30 மணியளவில் ரசிகாவை கணேசன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், அதன்பிறகு இருவரும் வீடு திரும்பாத நிலையில், மாலையில் திருச்செங்கோடம்பாளையம் சண்முகபுரம் களரங்காடு சாலைப் பகுதியில் உள்ள தனியார் ஜவுளி ஆலையின் பின்புறம், குமரன் கோவில் அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத காலி இடத்தில் ரசிகா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். ஆடு மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திருச்செங்கோடு ஊரகப் போலீசார் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது களரங்காடு பகுதியில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரசிகாவின் கழுத்து, மார்பு, தொடை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகக் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

Advertisement

மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிய கணேசன், தனது செல்போனை அணைத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே உள்ள நாச்சிப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். மதுபோதையில் இருந்த அவர், திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தனது உடலின் பல்வேறு பகுதிகளில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கணேசனை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருச்செங்கோடு போலீசார் மருத்துவமனையில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in