LATEST NEWS
“எனக்குத்தான் தாலி கட்ட வேண்டும்..!” காதலனுக்கு நாளை வேறொரு பெண்ணுடன் திருமணம்… மேளதாளம், மாலையுடன் காதலி கொடுத்த தரமான ட்விஸ்ட்.. வைரல் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், தனது காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போவதை அறிந்த இளம்பெண் ஒருவர், மேளதாளம் மற்றும் திருமண மாலையுடன் காதலன் வீட்டின் முன்பு வந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனில் இருந்து தனது குடும்பத்தினருடன் வந்த சோனியா என்ற அந்தப் பெண், தனது காதலன் அங்குஷைத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கூறி அவரது வீட்டின் வெளியே பெரும் வாக்குவாதத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார். இதனால், இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் மோதல் போக்கும் ஏற்பட்டது.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தானும் அங்குஷும் காதலித்து வருவதாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி அளித்திருந்ததாகவும் சோனியா தெரிவித்துள்ளார். மேலும், 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு அங்குஷ் தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்ட நிலையில், வரும் நவம்பர் 21-ஆம் தேதி அவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யவிருப்பதை அறிந்து, திருமண மாலையுடன் அவரது வீட்டிற்கு வந்ததாக சோனியா கூறியுள்ளார். வீட்டின் வெளியே ஏற்பட்ட இந்தக் கூச்சல் குழப்பம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சோனியா மற்றும் அவரது குடும்பத்தினரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
