LATEST NEWS
CM விஜய்க்கு அடுத்த தலைவலி..! “IAS, IPS அதிகாரிகளுக்கு” பகிரங்க மிரட்டல் விடுத்து ஆபாசமாகப் பேசிய தவெக MLA.. வைரலாகும் வீடியோவால் வெடித்த புதிய சர்ச்சை..!!
புதுச்சேரி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ சாய் சரவணகுமார், ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழாவில் அரசு அதிகாரிகள் பங்கேற்காததைக் கண்டித்துப் பேசிய அவர், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் இவ்வாறு பேசியுள்ளார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் (SP) விவகாரங்களில் அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆகியோர் சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில், தற்போது இந்த விவகாரமும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
