LATEST NEWS
தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு.. 70 தவெக MLA-க்கள் அதிருப்தி.. புயலாக வெடிக்கும் சதி! முதலமைச்சருக்குப் பேரதிர்ச்சி..!!
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகி வரும் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் புயலையும் கிளப்பியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதி வேலைகள் நடைபெற்று வருவதாக துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், தவெக-வைச் சேர்ந்த சுமார் 70 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) கடும் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் என ஸ்டாலினும், அதிமுக ஆட்சி மலரும் என எடப்பாடி பழனிசாமி (EPS) தரப்பினரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த அடுத்தடுத்த கருத்துகளும் நகர்வுகளும் முதலமைச்சருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
