“வேலை வாங்கி கொடுங்கள்… முதல் 2 மாதச் சம்பளமும் உங்களுக்கே..!” 2026 பட்டதாரி இளைஞரின் உருக்கமான பதிவால் கலங்கிய இணையம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வேலை வாங்கி கொடுங்கள்… முதல் 2 மாதச் சம்பளமும் உங்களுக்கே..!” 2026 பட்டதாரி இளைஞரின் உருக்கமான பதிவால் கலங்கிய இணையம்..!!

Published

on

2026-ஆம் ஆண்டில் கணினி அறிவியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், தனக்கு முதல் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருபவர்களுக்குத் தனது முதல் இரண்டு மாதச் சம்பளத்தையும் நன்றிக்கடனாக வழங்கத் தயாராக இருப்பதாகப் பிரபல சமூக வலைதளமான ரெட்டிட் தளத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜாவா டெவலப்பர் பணிக்காகத் தீவிரமாக முயற்சி செய்து வரும் அந்த இளைஞர், தனக்கு ஜாவா, ஸ்பிரிங் பூட், ஸ்பிரிங் செக்யூரிட்டி மற்றும் MySQL ஆகிய தொழில்நுட்பங்களில் நல்ல திறமை இருப்பதாகவும், இதுவரை மூன்று மென்பொருள் திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களிலோ அல்லது வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் முறையிலோ தனக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் போதும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தான் வேலைக்கு எந்த உத்தரவாதமும் கேட்கவில்லை என்றும், நேர்காணலில் தனது திறமையை நிரூபிக்க ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே தனக்குத் தேவை என்றும் அவர் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய ஐடி துறையில் புதிய பட்டதாரிகள் வேலை தேடுவதில் எதிர்கொள்ளும் கடும் சவால்களையும், போராட்டத்தையும் இந்தப் பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in