அவர்கள் என்ன பேசப்போகிறார்கள்ன்னு பார்ப்போம்..” ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்த இந்தியா கூட்டணி தலைவர்கள்… கனிமொழி சொன்ன அந்த முக்கிய தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அவர்கள் என்ன பேசப்போகிறார்கள்ன்னு பார்ப்போம்..” ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்த இந்தியா கூட்டணி தலைவர்கள்… கனிமொழி சொன்ன அந்த முக்கிய தகவல்..!!

Published

on

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்தியா கூட்டணி தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக சென்னை வந்துள்ளனர். இதற்கிடையே, மக்களவை எம்.பி. கனிமொழியும் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “தொகுதி மறுவரையறை தொடர்பாக மு.க.ஸ்டாலின் முடிவை அறிவித்துவிட்டார். நேற்று எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டார். திமுகவின் நிலைப்பாட்டை கார்கேவிடம் தெளிவாக தெரிவித்து விட்டேன்.

Advertisement

இந்தியா கூட்டணி தலைவர்கள், மு.க.ஸ்டாலினிடம் பேசுவதற்காக சென்னை வந்துள்ளனர். அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் என்ன பேசப்போகிறார்கள் என்பதை அறிந்து, பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவிப்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in