“மிரட்டும் டெங்கு காய்ச்சல்”… தேங்கிக் கிடக்கும் மழைநீரால் அதிகரிக்கும் ஆபத்து… இளம் மாணவர் பலியானதால் மக்கள் கொந்தளிப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மிரட்டும் டெங்கு காய்ச்சல்”… தேங்கிக் கிடக்கும் மழைநீரால் அதிகரிக்கும் ஆபத்து… இளம் மாணவர் பலியானதால் மக்கள் கொந்தளிப்பு…!!

Published

on

திருமழிசை காவல்சேரி சாலை ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த எட்வின் சாமுவேல் ராஜாவின் மகன் ரெமோ கிறிஸ்டோபர் எட்வின் (வயது 18), தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரை, சிகிச்சைக்காகத் திருமழிசையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவப் பரிசோதனையில் மாணவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவன் ரெமோ கிறிஸ்டோபர் எட்வின் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

திருமழிசை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த சில வாரங்களாகக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தேங்கியுள்ள மழைநீர் மற்றும் குப்பைகளை முறையாக அகற்றவும், கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி மருத்துவ முகாம் அமைக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in