“என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்!”… நானும் ரத்தமும் சதையும் கொண்ட மனுஷிதான்… அழகு சிகிச்சை வதந்திகளால் கொதித்தெழுந்த நடிகை ஜாஸ்மின் பாசின்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள்!”… நானும் ரத்தமும் சதையும் கொண்ட மனுஷிதான்… அழகு சிகிச்சை வதந்திகளால் கொதித்தெழுந்த நடிகை ஜாஸ்மின் பாசின்…!!

Published

on

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களைத் தொடர்ந்து, நடிகை ஜாஸ்மின் பாசின் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் அழகு சிகிச்சை செய்து கொண்டதாக வதந்திகள் பரவின. இதற்கு இன்ஸ்டாகிராம் மூலம் காட்டமாகப் பதிலளித்த அவர், ஒவ்வொரு முறை முகம் சற்று வித்தியாசமாகத் தெரிந்தாலும் உடனே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகக் கதை கட்டுவதா என விமர்சிப்பவர்களைக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ச்சியான பயணம், தூக்கமின்மை, சைனஸ் பாதிப்பு, களைப்பு, வெவ்வேறு மேக்கப் கலைஞர்கள் மற்றும் உடற்பயிற்சி மாற்றங்களால் எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் முகத்தில் இயல்பான மாற்றங்கள் ஏற்படுவது சகஜம் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். தன் முகம் எப்போதும் இன்ஸ்டாகிராம் பில்டர் போல இருக்க முடியாது என்றும், சில நாட்களில் வீக்கம் அல்லது சோர்வாகத் தெரிவது இயல்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தானும் ரத்தமும் சதையும் எலும்பும் கொண்ட சாதாரண மனிதர்தான் என்றும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்யக்கூட நேரமும் அவகாசமும் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனக்குத் தன் முகம் மற்றும் உடல் மீது முழுமையான அன்பும் திருப்தியும் இருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாகவோ அல்லது முழுமையாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறி, தன்னை நிம்மதியாக இருக்க விடுமாறு காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in