LATEST NEWS
“யாரும் கவலைப்படாதீங்க..” நகைக் கடன் வாங்கியவர்களுக்கு வந்த நோட்டீஸ்.. வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!
நகைக் கடன் தொடர்பான நோட்டீஸ்களைப் பார்த்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. கடன் வாங்கியோர் கவலைப்பட வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ள அந்தச் சங்கம், பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இக்கருத்தை முன்வைத்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய அச்சங்கத்தின் துணைத் தலைவர் சிபி கிருஷ்ணன், கடனைத் திருப்பிச் செலுத்த வாடிக்கையாளர்கள் வங்கிகளிடம் கால அவகாசம் கேட்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் RBI விதிகளைக் காரணம் காட்டி கடன் வாங்கியவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக விதிகளை RBI தளர்த்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
