“சனி, ஞாயிறு ஓய்வு முடிந்து திங்கள் வந்தாலாவது பேசுவாரா..?” முதல்வர் விஜய்யை நாராசமாய் விளாசிய மு.க.ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சனி, ஞாயிறு ஓய்வு முடிந்து திங்கள் வந்தாலாவது பேசுவாரா..?” முதல்வர் விஜய்யை நாராசமாய் விளாசிய மு.க.ஸ்டாலின்..!!

Published

on

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் வரம்புமீறலால் மாநில அரசின் உரிமைகளும் பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனது குறித்து தமிழக முதல்வர் இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். சனி, ஞாயிறு வார இறுதி ஓய்வு முடிந்து திங்கள் வந்தாலாவது பேசுவாரா எனக் கேட்டுள்ள அவர், அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு கலெக்டரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் தற்போதைய முதல்வரின் நிர்வாகத் திறன் என்று விமர்சித்துள்ளார்.

மக்களின் பொழுதைப் போக்கும் நடிகர் முதல்வரானால் தமிழகம் காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்தக் கருத்தும் பொறுப்புக்கூறலையும் கோராமல் திமுகவைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

நீதித்துறை வரம்புமீறலால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரை நூற்றாண்டு காலமாகப் பல போராட்டங்களை நடத்திய திமுகவுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்டிட திமுக என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும் என்றும் வெல்லும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in