“அப்பாவின் பவர் இப்போது புரிந்ததா..?” சென்னைக்கு படையெடுத்த இந்தியா கூட்டணி தலைவர்கள்… திவ்யா சத்யராஜ் போட்ட ஒரே போடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்பாவின் பவர் இப்போது புரிந்ததா..?” சென்னைக்கு படையெடுத்த இந்தியா கூட்டணி தலைவர்கள்… திவ்யா சத்யராஜ் போட்ட ஒரே போடு..!!

Published

on

சென்னை, தொகுதி மறுவரையறை விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திக்க சென்னை வந்துள்ளனர். இந்தச் சூழலில், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு கவனம் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட மசோதா விவகாரம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை பாதிக்கப்படக்கூடாது என்ற கோரிக்கை பல்வேறு அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மசோதா தொடர்பாக எதிர்ப்புகளை முன்வைத்து வருகின்றன. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னை வந்துள்ளனர்.

Advertisement

இந்தச் சூழலில், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அப்பாவைக் காணோம் என்ற அறிவிலிகளே, அப்பாவின் பவர் இப்போது புரிந்ததா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில், திவ்யா சத்யராஜின் இந்தப் பதிவு தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in