“எங்களுக்கு நவோதயா பள்ளிகள்வேண்டாம்.. சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரை உடனே கூட்டுங்க..” உதயநிதி அதிரடி முழக்கம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்களுக்கு நவோதயா பள்ளிகள்வேண்டாம்.. சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரை உடனே கூட்டுங்க..” உதயநிதி அதிரடி முழக்கம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்றும், அத்தகைய முயற்சிகளை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சட்ட ரீதியாகத் தடுத்து நிறுத்துவோம் என்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளித்துள்ள அவர், இந்தி கற்பதற்கும் நாட்டுப்பற்றிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தமிழ்நாடு தனி நாடாக இயங்கவில்லை, மாறாகத் தனது தனித்தன்மையுடன் இயங்கி இந்தியாவின் முதன்மை வளர்ச்சி இன்ஜினாகத் திகழ்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரி பள்ளிகள் மூலமாக ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி சிறப்பாக வழங்கப்பட்டு வருவதால், நவோதயா பள்ளிகளுக்கெனத் தனியாக இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதாலேயே ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தேவைப்பட்டால் உடனடியாகச் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி நவோதயா பள்ளிகளுக்கு எதிராகத் தனித் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் தற்போதைய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in