LATEST NEWS
பகீர்.. வாலிபரை பிணைக் கைதியாக பிடித்து வைத்து இளம் பெண் செய்த கொடூரம்.. ஹோட்டல் அறையில் நடந்த பயங்கர சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வாலிபர் ஒருவரைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்து, இளம் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீல்கானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த கொடூரத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கரமாக வைரலானதை அடுத்து, காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளனர்.
ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், அந்த வாலிபர் தாக்கப்பட்டதை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது அந்தப் பெண்ணுடன் ஹோட்டல் அறையில் இருந்த மற்ற நபர்கள் யார் என்பது குறித்தும், அவர்களின் பின்னணி குறித்தும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்யக் கான்பூர் போலீஸார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்
