தகாத இடங்களை தொட்டு… வலுக்கட்டாயமாக மடியில் தூக்கி வைத்து… 52 வயசு தலைமை ஆசிரியர் செய்த காரியம்… 8-ம் வகுப்பு சிறுமிகள் சொன்ன பகீர் தகவல்…!! – cinefeeds
Connect with us

CRIME

தகாத இடங்களை தொட்டு… வலுக்கட்டாயமாக மடியில் தூக்கி வைத்து… 52 வயசு தலைமை ஆசிரியர் செய்த காரியம்… 8-ம் வகுப்பு சிறுமிகள் சொன்ன பகீர் தகவல்…!!

Published

on

பீகார் மாநிலம் நவாதா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நவாதா சதர் பகுதியிலுள்ள ஆனந்தபுரா நடுநிலைப்பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் 52 வயதுடைய மகேஷ் பிரசாத் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களைப் பெறுவதற்காகத் தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் அந்த மாணவியைத் தவறான எண்ணத்துடன் தொட்டு அநாகரிகமாக நடந்துள்ளார். இதுகுறித்து அம்மாணவி வெளியே வந்து மற்ற தோழிகளிடம் கூறியபோது, தங்களுக்கு முன்பே அவர் இதுபோன்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சில சமயங்களில் தங்களைக் கட்டாயப்படுத்தி மடியில் தூக்கி வைத்துக் கொள்வதாகவும் மற்ற மாணவிகளும் அடுக்கடுக்கான புகார்களைக் கூறியுள்ளனர்.

Advertisement

இந்த விபரீத விவகாரம் குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவிக்க, விஷயம் அறிந்த கிராம மக்கள் பெரும் ஆத்திரமடைந்து பள்ளி வளாகத்தில் திரண்டனர். கோபமடைந்த பொதுமக்கள் தலைமை ஆசிரியரை அவரது அலுவலக அறைக்குள்ளேயே வைத்துப் பூட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார், பொதுமக்களைச் சமாதானப்படுத்தி தலைமை ஆசிரியரைப் பத்திரமாக மீட்டுத் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மாணவிகளின் புகாரின் அடிப்படையில், நகர் காவல் நிலைய போலீசார் தலைமை ஆசிரியர் மகேஷ் பிரசாத் யாதவ் மீது போக்சோ (POCSO) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை முறைப்படி கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், முழுமையான விசாரணைக்குப் பிறகே சட்டப்படியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in