CRIME
“அந்த பையனோட உல்லாசமா இரு” இல்லனா நான் செத்துருவேன்… வருங்கால மனைவிக்கு வாலிபர் போட்ட விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனியில் நடந்த பாலே சம்பவம்…!!
மகாராஷ்டிர மாநிலம் வசாய் பகுதியில் திருமண இணையதளம் மூலம் பெண் மருத்துவரை ஏமாற்றி, விசித்திரமான நிபந்தனை விதித்து பாலியல் மோசடியில் ஈடுபட்ட 34 வயது வாலிபரை வாலீவ் போலீசார் கைது செய்துள்ளனர். நாலாசோபாரா பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சத்புதே என்ற அந்த நபர், போலியான பெயரில் ஐடி இன்ஜினியர் என்றும், ஆண்டுக்கு 37 லட்ச ரூபாய் சம்பளம் என்றும் கூறி 30 வயது பெண் மருத்துவரிடம் பழகி வந்துள்ளார்.
திருமணப் பேச்சை முன்னெடுத்த போது, அந்த நபர் ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளார். தனது வருங்கால மனைவியின் உடல்திறனைப் பரிசோதிக்க விரும்புவதாகவும், அதற்காகத் தான் தரும் ஒரு ‘பிளேபாய்’ (Playboy) நபரின் எண்ணைத் தொடர்பு கொண்டு, அவருடன் ஹோட்டலில் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய பெண் மருத்துவரும் குறிப்பிட்ட ஹோட்டலுக்குச் சென்று அந்த நபருடன் தனிமையில் இருந்துள்ளார். அதன் பின்னர், ஜோதிடர் ஒருவர் இந்தத் திருமணம் நடந்தால் 3 மாதங்களில் கணவருக்கு மரணம் ஏற்படும் எனக் கூறியதாகச் சாக்குப்போக்கு சொல்லி சுபாஷ் திருமணத்தை நிராகரித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பெண் மருத்துவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இன்ஜினியர் போலப் பழகியதும், ஹோட்டலுக்குப் ‘பிளேபாய்’ என்ற பெயரில் வந்ததும் வேறு யாரும் இல்லை, சுபாஷ் என்ற ஒரே நபர்தான் என்பது அம்பலமானது. இரண்டு வேடங்களில் நடித்து மருத்துவரை ஏமாற்றிய குற்றத்திற்காகச் சுபாஷைக் கைது செய்துள்ள போலீசார், அவரது மொபைல் போனைப் பறிமுதல் செய்து இதேபோன்று வேறு பெண்களையும் அவர் ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
