“மாமா, தார் கார் வாங்கிருக்கேன் வாங்க!” பூஜை போட அழைத்த மருமகன்.. தேடிய நகைகள் எங்கே..? காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்..!! – cinefeeds
Connect with us

CRIME

“மாமா, தார் கார் வாங்கிருக்கேன் வாங்க!” பூஜை போட அழைத்த மருமகன்.. தேடிய நகைகள் எங்கே..? காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில், புதிய கார் வாங்க வேண்டும் என்ற தீவிர ஆசையில் தனது சொந்த மாமாவின் வீட்டிலிருந்த தங்க நகைகளைத் திருடி விற்ற 19 வயது இளைஞர் சமர் சவான் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட இளைஞர், தனது மாமா உமேஷ் மாருதி சவானின் வீட்டில் இருந்த சுமார் 15 தோலா தங்க நகைகளைத் திருடி, உள்ளூர் நகை வியாபாரி ஒருவரின் உதவியுடன் விற்றுள்ளார். இதன் மூலம் கிடைத்த சுமார் ரூ.10 லட்சம் பணத்தைக் கொண்டு அவர் புதிய மஹிந்திரா தார் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியில் திளைத்த சமர், அதற்குச் சிறப்புப் பூஜை நடத்த ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்குமாறு நக பறிகொடுத்த தனது மாமா உமேஷையே அழைத்துள்ளார். கார் பூஜைக்குச் செல்வதற்காகத் தயாரான உமேஷ், அணிந்து கொள்வதற்காகத் தனது வீட்டில் நகைகளைத் தேடியபோதுதான், அவருக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமான தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.

Advertisement

அதே வீட்டில் வைக்கப்பட்டிருந்த உமேஷின் பாட்டிக்குச் சொந்தமான நகைகள் அப்படியே இருக்க, இவர்களுடைய நகைகள் மட்டுமே காணாமல் போனதால் நெருக்கமானவர்களே திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து உமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, வருமானம் ஏதும் இல்லாத 19 வயது இளைஞரான சமர் திடீரெனப் புதிய தார் காரை வாங்கியது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மாமா வீட்டில் நகைகளைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இளைஞர் சமர் சவான் மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in