CRIME
இவனெல்லாம் மனுஷனா..? “ச்சீ பொம்பள பிள்ளைய பெத்துருக்க” பிரசவ வார்டில் வைத்தே மனைவி முகத்தை கொடூரமாக சிதைத்த கணவன்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா மருத்துவமனையில், பெண் குழந்தை பெற்றெடுத்த காரணத்திற்காக மனைவியை மருத்துவமனை வார்டுக்குள்ளேயே கணவன் சரமாரியாகத் தாக்கிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட 35 வயதுடைய அந்தப் பெண், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்
பிரசவத்திற்குப் பிறகு வார்டுக்குள் வந்த 45 வயது கணவன், ஆண் குழந்தையோடு சேர்த்து ஒரு பெண் குழந்தையும் பிறந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மனைவியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் அப்பெண்ணின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. கணவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார் என உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், மோதிரம் மற்றும் நகங்களால் முகத்தைக் கீறியதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை வார்டிலேயே பிரசவித்த தாய் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
