“இதுதான் என் கடைசி வீடியோ” பாப்பாவை பாத்துக்கோ கமல்… இன்ஸ்டாகிராமில் கண்ணீர் வீடியோ வெளியிட்டு 2 குழந்தைகளின் தாய் தற்கொலை.. பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இதுதான் என் கடைசி வீடியோ” பாப்பாவை பாத்துக்கோ கமல்… இன்ஸ்டாகிராமில் கண்ணீர் வீடியோ வெளியிட்டு 2 குழந்தைகளின் தாய் தற்கொலை.. பகீர் சம்பவம்..!!

Published

on

“நான் சாகப் போறேன்.. பாப்பாவை பாத்துக்கோ” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, இரண்டு பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகள் 25 வயதுடைய ரேணுகா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ஆவார்.

கடந்த சில ஆண்டுகளாக ரேணுகாவிற்கும், அவரது கணவர் கமலுக்கும் இடையே கடுமையான குடும்பப் பிரச்சினை மற்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கமல் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிடவே, ரேணுகா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ அவர் பலமுறை முயற்சித்த போதிலும், கமல் அவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 16) காலை ரேணுகா தனது சகோதரி ஸ்ரீதேவிக்கு வாட்ஸ்அப் மூலம், தான் தற்கொலை செய்யப் போவதாகவும், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுமாறும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரி உடனடியாக உறவினர்களை அனுப்பிப் பார்த்தபோது, ரேணுகா வீட்டில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ரேணுகா தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “கமல்… நீயும் தப்பு பண்ண, நானும் தப்பு பண்ணேன், நீ திரும்பி வருவேன்னு நினைச்சேன் ஆனா விட்டுட்டு போய்ட்ட… என்னை இன்ஸ்டாவில் சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் தேங்ஸ், இதுதான் என் கடைசி வீடியோ” என்று அவர் கண்ணீருடன் பேசியிருப்பது பார்ப்போரை உலுக்கியுள்ளது. சோஷியல் மீடியாவில் வீடியோ பதிவிட்டுவிட்டு இளம் தாய் தற்கொலை செய்து கொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in