“அவருக்கு தைரியம் இருந்தால்” எங்க தலைவர் விஜய் பெயரை நேரடியாகச் சொல்லட்டும்… விஜய் சேதுபதிக்கு தவெக எம்.எல்.ஏ கனிமொழி சாட்டையடி பதில்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவருக்கு தைரியம் இருந்தால்” எங்க தலைவர் விஜய் பெயரை நேரடியாகச் சொல்லட்டும்… விஜய் சேதுபதிக்கு தவெக எம்.எல்.ஏ கனிமொழி சாட்டையடி பதில்..!!

Published

on

“நடிகர் விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் தமிழ்நாட்டு அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் சவால் விடுத்துள்ளார். கோவை மாவட்டம் செரையம்பாளையம் பகுதியில் நடைபெற்ற அரசுப் பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் அரசியல் விவாதமாக மாறியது குறித்து இவ்வாறு பதிலளித்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான கருத்துரிமை அனைவருக்கும் இருப்பதாகக் குறிப்பிட்ட கனிமொழி சந்தோஷ், ஒரு குறிப்பிட்ட கட்சியின் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால், மறைமுகமாகப் பேசாமல் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றார். மேலும், “எங்கள் தலைவர் விஜய் அவர்களின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசட்டும், அதற்கு மக்கள் தகுந்த பதிலைச் சொல்வார்கள்” என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

Advertisement

தற்போதைய அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், மக்களிடம் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் விளக்கமளித்துள்ளார். கேளிக்கை நிகழ்ச்சிகளில் பொதுவாகப் பேசப்படும் கருத்துகளை மக்கள் அரசியல் ரீதியாக எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம் என்றும், மக்கள் செயல்பாடுகளின் அடிப்படையில் தான் இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in