“விஜய் சேதுபதி சொன்ன அந்த ஒரு வார்த்தை…” முதல்வர் விஜயை குறிவைத்தாரா..? இந்த விஷயம் சர்சையானது ஏன்..??? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய் சேதுபதி சொன்ன அந்த ஒரு வார்த்தை…” முதல்வர் விஜயை குறிவைத்தாரா..? இந்த விஷயம் சர்சையானது ஏன்..???

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், போட்டியாளர் ஷாதிகாவிடம் தலைமைப்பண்பு குறித்து தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், தற்போது சின்னத்திரையை தாண்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாதிகாவிடம் உரையாடிய விஜய் சேதுபதி, தலைவருக்கான பொறுப்புகள் குறித்துப் பேசினார். “நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கக் கூடாது. பிரச்சனை என்று வரும்போது, அதை எதிர்கொள்ளாமல் எதிர்த்தரப்பினர் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடிவிடுவதோ அல்லது விலகிக் கொள்வதோ ஒரு சிறந்த தலைவருக்கு அழகல்ல” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

இந்த உரையாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றி கழகக் கட்சியினரை மையப்படுத்தி இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், விஜய் சேதுபதி தனது உரையாடலில் முதலமைச்சர் விஜயையோ, அவரது கட்சியையோ அல்லது எந்தவொரு அரசியல் இயக்கத்தையோ பெயர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in