LATEST NEWS
உங்க வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்தணும்னு நினைக்கிறேன்… திமுகவை கிழித்து தொங்கவிட்ட துரை வைகோ…!!
கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ “திமுகவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கூட்டணியில் தங்களைச் சொந்தச் சின்னத்தில் போட்டியிட விடாமல் திமுக அழுத்தம் கொடுத்தது தங்களுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், மு.க.ஸ்டாலினுடன் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டு இனி திமுகவுடன் பயணிக்கக் கூடாது எனத் தாங்கள் முடிவெடுத்த காரணத்தையும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் ஓப்பனாக உடைத்துப் பேசியுள்ளார்.
மேலும் தொடர்ந்து ஆவேசமாகப் பேசிய அவர், “அட பைத்தியக்காரர்களா.. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? நான் வீழவில்லை. வீழ்ந்தது தீய சக்தி, வீழ்ந்தது நம்மை அழிக்க வந்த சக்தி” என்று பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி திமுகவினரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் நாடாளுமன்றப் பதவி என்பது திமுக போட்ட பிச்சை என்ற விமர்சனத்தை முன்வைப்பவர்களைச் சாடிய அவர், தேர்தல் கூட்டணியின் போது மதிமுகவிற்கு இழைக்கப்பட்ட துரோகங்களை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
