LATEST NEWS
அதிர்ச்சியில் தமிழகம்..! திருமாவளவனை சட்டமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுத்தது தி.மு.க தான் – துரை வைகோ அதிரடி குற்றச்சாட்டு.!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனைச் சட்டமன்றத்திற்குள் செல்லவிடாமல் தி.மு.க. தான் தடுத்ததாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறியதற்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு அணுகுமுறையும், அதன் தவறான செயல்பாடுகளுமே காரணம் என்ற திருமாவளவனின் விமர்சனத்தைத் துரை வைகோ முழுமையாக வழிமொழிந்துள்ளார்.
கடந்த காலங்களில் தி.மு.க. எடுத்த தன்னிச்சையான அரசியல் முடிவுகளும், கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதமுமே இந்த மாற்றத்திற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசிக, மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்துள்ள தற்போதைய அரசியல் சூழலில், துரை வைகோவின் இந்த விமர்சனம் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
