LATEST NEWS
“அடுத்த சாரி எப்போ வரும் புரோ..?” முதலமைச்சர் விஜய்யை ஓட்டேரி பாணியில் வறுத்தெடுத்த புளூ சட்டை மாறன்..!!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்பிற்குப் புறம்பாக நடந்து கொண்டதாகக் கூறி, தமிழக முதலமைச்சர் விஜய் மீது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது விஜய்யின் உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதே தவிர, அது தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் உள்நோக்கம் கொண்டதல்ல என்று விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலடியாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், விஜய் முதலமைச்சரான பிறகு தனது வீட்டிற்கு வந்து, “தேர்தல் பரப்புரையில் உங்களை அளவுக்கதிமாக விமர்சித்துவிட்டேன், ஐ அம் சாரி” என்று வருத்தம் தெரிவித்ததை நினைவு கூர்ந்துள்ளார். மேலும், சட்டமன்றத்திற்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த வீடியோ பதிவைச் சுட்டிக்காட்டி, பிரபல திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யைக் கிண்டல் செய்துள்ளார். “சாரி மட்டும் சொன்னா போதுமா சார்?” என்று ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய விஜய், தேர்தல் பரப்புரை மற்றும் சட்டமன்ற நிகழ்வு என இதுவரை இரண்டு முறை அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனை அடிப்படையாக வைத்து, “அடுத்த சாரி எப்போது வரும் புரோ?” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டு விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்துள்ளார்.
