BREAKING:சீன மண்ணில் நடந்த இறுதிப்போட்டி… ஹாக்கியில் தங்கம் வென்று அசத்திய இந்திய சிங்கப் பெண்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING:சீன மண்ணில் நடந்த இறுதிப்போட்டி… ஹாக்கியில் தங்கம் வென்று அசத்திய இந்திய சிங்கப் பெண்கள்..!!

Published

on

ஏசியன் கேம்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில், இந்திய அணி சீனாவை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஒட்டுமொத்த நாடே ஆவலுடன் எதிர்பார்த்த இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்தியா மற்றும் சீனா அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய வீராங்கனைகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் 10-வது நிமிடத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை லால்ரெம்சியாமி மிக அற்புதமாக ஒரு கோல் அடித்து, இந்திய அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெறச் செய்தார்.

இந்த ஆரம்பக்கட்ட அதிர்ச்சியிலிருந்து மீள முயன்ற சீன அணி, ஆட்டத்தின் இறுதிவரை பதில் கோல் அடிக்கப் பலமுறை போராடியும் இந்திய அணியின் பலமான தடுப்பாட்டத்தை மீறி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்து இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் சுமார் 44 வருடங்களுக்குப் பிறகு மகளிர் ஹாக்கியில் இந்தியா தங்கம் வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று வெற்றியைப் பிரதமர் மோடி உள்ளிட்ட ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in