LATEST NEWS
“ஏர்டெல் பயனாளர்களுக்குப் பேரிடி..” இனி ரீசார்ஜ் கட்டணம் ரூ.350 ஆக உயர்வு..? தலைவர் சுனில் மிட்டல் அதிர்ச்சி தகவல்..!!
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான குறைந்தபட்ச மாதக் கட்டணத்தை ஒரு நபருக்கு 350 ரூபாயாக உயர்த்த வேண்டும் என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் வலியுறுத்தியுள்ளார். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கவும், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு முதலீடுகளை மேம்படுத்தவும் இந்தக் கட்டண உயர்வு அவசியம் என்ற அடிப்படையில் அவர் இக்கருத்தை முன்வைத்துள்ளார்.
இது குறித்து மேலும் விளக்கமளித்த அவர், மாதக் கட்டணம் 350 ரூபாயாக உயர்த்தப்பட்டாலும் கூட, உலகளவில் மிகக் குறைந்த கட்டணத்தில் மொபைல் சேவைகளை வழங்கும் நாடாக இந்தியாவே தொடர்ந்து நீடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். சராசரியாக ஒரு நாளைக்கு 10 முதல் 12 ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என்பதால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் மலிவான கட்டணம்தான் என்றும் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
