CRIME
அடக்கடவுளே.. ஹோட்டல் அறையில் அமெரிக்க இன்ஜினியர் சடலம்.. சோதனையிட்ட போலீசாருக்கு சிக்கிய ‘அந்த’ 6 மாத்திரை அட்டைகள்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் உண்மை..!!
அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வந்த பிராஞ்சில் பதக் என்பவர், குருகிராமில் உள்ள தனது ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகியிருந்த நிலையில், தனது வருங்கால மனைவியுடன் திருமணத்திற்கான ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக லண்டனில் இருந்து இந்தியா வந்திருந்தார். இந்த நிலையில், ஹோட்டல் அறையில் அவர் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பிராஞ்சில் பதக் தங்கியிருந்த ஹோட்டல் அறையை போலீசார் சோதனையிட்டபோது, அங்கிருந்து சில மருந்து மாத்திரை அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த அட்டைகளில் இருந்து ஆறு மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு காலியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் அந்த மாத்திரைகளை உட்கொண்டதற்கும், அவரது இந்த மர்ம மரணத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் குருகிராம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணக் கோலம் காண வேண்டிய இளைஞர், ஷாப்பிங் வந்த இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
