CRIME
“நண்பர்களே எதிரிகளாக மாறிய கொடூரம்..” 7 நாட்களுக்குப் பின் பிரபல தொழிலதிபரின் சடலம் கங்கையில் மீட்பு.. தற்கொலை கடிதத்தில் அம்பலமான பகீர் உண்மைகள்..!!
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் ரிசார்ட் நடத்தி வந்த கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நீரஜ் குப்தா என்பவரின் சடலம், ஏழு நாட்களுக்குப் பிறகு கங்கை நதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு அவர் தான் தங்கியிருந்த ரிசார்ட்டில் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவரது உடல் கங்கை நதியில் கண்டெடுக்கப்பட்டது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரஜ் குப்தா எழுதி வைத்திருந்த அந்தத் தற்கொலை கடிதத்தில், தனது நண்பர்களான ரவி பஜாஜ் மற்றும் ககன் பத்ரா ஆகிய இருவரும் தன்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும், அவர்களின் மன உளைச்சலே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்தத் தற்கொலை கடித ஆதாரத்தின் அடிப்படையில், நீரஜ் குப்தாவின் மரணத்திற்கு காரணமான அவரது நண்பர்கள் ரவி பஜாஜ் மற்றும் ககன் பத்ரா ஆகிய இருவர் மீதும் தற்போது போலீசார் வழக்கு (FIR) பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
