“2027 ஜனவரி முதல் செக் புக் செல்லாதா..?” வங்கி வாடிக்கையாளர்களை அதிரவைத்த வதந்திக்கு RBI கொடுத்த விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“2027 ஜனவரி முதல் செக் புக் செல்லாதா..?” வங்கி வாடிக்கையாளர்களை அதிரவைத்த வதந்திக்கு RBI கொடுத்த விளக்கம்..!!

Published

on

2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பழைய செக் புத்தகங்கள் அனைத்தும் செல்லாததாகிவிடும் என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக, புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நவீன செக் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், அதனால் பழைய புத்தகங்கள் காலாவதியாகிவிடும் என்றும் பரவலான தகவல்கள் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின.

இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி, தற்போதைய சூழலில் செக் புத்தகங்களின் வடிவம் அல்லது நடைமுறையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களின் தற்போதைய செக் புத்தகங்களை எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும், இது போன்ற போலியான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in