அடக்கடவுளே… நண்பனுக்கு அனுப்புன ஒரே ஒரு முதலை போட்டோ… ரூ. 74 லட்சம் ஃபைன்… 3 வருஷம் ஜெயில்..! AI-ஆல் நபருக்கு நேர்ந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே… நண்பனுக்கு அனுப்புன ஒரே ஒரு முதலை போட்டோ… ரூ. 74 லட்சம் ஃபைன்… 3 வருஷம் ஜெயில்..! AI-ஆல் நபருக்கு நேர்ந்த கொடூரம்..!!

Published

on

சிங்கப்பூரில் ஆகஸ்ட் 20 அன்று, இந்தோனேசியாவைச் சேர்ந்த யே லின் என்ற நபர் ‘ஜேமினி AI’ செயலி மூலம் ஒரு பயங்கரமான முதலை நீரில் இருப்பது போன்ற போலியான புகைப்படத்தை உருவாக்கினார். பின் வேடிக்கையாக அந்தப் படத்தை தன் உடன் வேலை செய்யும் நண்பருக்கு அனுப்பி வைத்தார். சில நொடிகளில் உருவாக்கப்பட்ட இந்த ஒரு புகைப்படம், அரசாங்க நிர்வாகத்தையும் காவல்துறையையும் பெரும் பரபரப்பிற்கு உள்ளாக்கும் என்றும், தனக்கே பெரிய ஆபத்தாக முடியும் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.

இந்தப் போலி செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, சிங்கப்பூரின் தேசிய நீர் முகமை உடனடியாகக் களத்தில் இறங்கியது. பாண்டன் நீர்த்தேக்கப் பகுதியில் முதலை இருக்கிறதா எனத் தீவிரமாகத் தேடும் பெரிய அளவிலான தேடுதல் வேட்டைத் தொடங்கியது. இதன் காரணமாகப் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, சிங்கப்பூர் ரோயிங் அசோசியேஷன் மற்றும் சிங்கப்பூர் கேனோ ஃபெடரேஷன் ஆகிய அமைப்புகள் தங்களின் நீர் சார்ந்த அனைத்துப் பயிற்சிகளையும் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தின.

Advertisement

ஆகஸ்ட் 21 அன்று, அந்த முதலை புகைப்படம் முற்றிலும் AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி எனத் தெரியவந்த போது, அதிகாரிகளின் பெரும் தொகையும் நேரமும் வீணாகியிருந்தது. உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும், யே லின் உடனே வாட்ஸ்அப் அரட்டையிலிருந்து புகைப்படத்தையும், ஜேமினி செயலியின் வரலாற்றுப் பதிவுகளையும் நீக்கி ஆதாரங்களை அழிக்க முயன்றார். இருப்பினும் காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு, பொய் தகவலைப் பரப்பியதற்காகவும் நீதித் துறை நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ. 74 லட்சம் வரை அபராதம் அல்லது 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in