LATEST NEWS
பாசம் காட்ட வேண்டிய குழந்தையை துன்புறுத்தி.. 8 மாத குழந்தை அழுததால் நேர்ந்த கொடூரம்… பெற்றோர்களே செய்த பயங்கரம்..!!!
சிங்கப்பூரில் வெறும் 8 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று பெற்றோரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை அழுவதை நிறுத்துவதற்காக அதைப் பலமாகக் குலுக்குவது மற்றும் அடிப்பது போன்ற கொடூரமான செயல்களில் பெற்றோர் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 2024 செப்டம்பர் 1-ஆம் தேதி இரவு குழந்தை அழுதபோது, அதன் முகத்தை மூடி அமுக்கிய தாய், பின்னர் அதைத் குப்புறப் படுக்க வைத்துள்ளார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்த நாள் அதிகாலை அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இறந்துபோன குழந்தையின் உடலில் முன்னரே பல காயங்களும், சிராய்ப்புகளும் இருந்ததை மருத்துவப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தின. குழந்தையின் பாட்டி மற்றும் பராமரிப்பாளர் ஆகியோர் குழந்தையைத் துன்புறுத்துவதை நிறுத்துமாறு ஏற்கனவே எச்சரித்திருந்தும் பெற்றோர் அதைக் கேட்கவில்லை. குழந்தை மூச்சுவிடாமல் தவித்த இறுதித் தருணத்தில் கூட, அதன் தந்தை அதைத் தடுக்காமல் தனது மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக நீதிமன்ற விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.
இந்தக் கொடூர வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தம்பதியினருக்குச் சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 2026 அக்டோபர் 21 அன்று சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, குழந்தையின் பாதுகாப்பு மற்றும் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்த தாய் குளோய்க்கு 15 ஆண்டுகள் 3 மாதங்களும், குழந்தையைக் காப்பாற்றத் தவறிய தந்தை நியோவுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தாயின் வயது மற்றும் அனுபவமின்மையைக் காரணம் காட்டி தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
