CRIME
“17 நிர்வாண வீடியோக்கள்..” எல்லாம் அதுக்குத்தான்… காதலியால் கையும் களவுமாக சிக்கிய காதலன்… வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார்..!
சிங்கப்பூரில் வசித்து வந்த தென் கொரியாவைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவர், தனது முன்னாள் காதலியுடன் வீடியோ காலில் உரையாடிய நிர்வாணக் காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்து வைத்திருந்த குற்றத்திற்காகச் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 45 வயது கொரியப் பெண்ணும் இந்த நபரும் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு நாடுகளில் இருந்ததால் பெரும்பாலும் வீடியோ கால் மூலமாகவே தங்களது உறவைத் தொடர்ந்துள்ளனர்.
அவ்வாறு ‘நிர்வாண வீடியோ கால்’ அழைப்புகளில் ஈடுபட்டபோது, அந்தப் பெண் “காணொளியைப் பதிவு செய்ய வேண்டாம்” என்று பலமுறை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அந்த நபர் தான் பதிவு செய்யவில்லை என்றும், அதை எப்படி ரெக்கார்ட் செய்வது என்றே தனக்குத் தெரியாது என்றும் பொய் கூறியுள்ளார். எனினும், காதலிக்குத் தெரியாமல் 2023 பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 7 முதல் 55 நிமிடங்கள் வரையிலான 17 நிர்வாண வீடியோக்களைத் தனது சுய இன்பத் தேவைகளுக்காக ரகசியமாகப் பதிவு செய்து, ஹார்டு டிரைவில் சேமித்து வைத்துள்ளார்.
இதனிடையே 2024 ஜனவரியில் இவர்கள் பிரிந்ததைத் தொடர்ந்து, அந்த நபர் வேறொரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கினார். அந்தப் புதிய காதலி வீட்டைச் சுத்தம் செய்தபோது தற்செயலாக இந்த ஹார்டு டிரைவைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தார். புதிய காதலியின் எச்சரிக்கையால் அந்த நபர் வீடியோக்களை அவசரமாக அழித்தபோதிலும், அந்தப் பெண் அதற்குள்ளாகவே அந்த வீடியோக்களை நகலெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார். பின்னர், அந்தப் புதிய காதலி சமூக ஊடகத்தில் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய பிறகே, பாதிக்கப்பட்ட முன்னாள் காதலிக்கு இந்தத் துரோகம் குறித்துத் தெரியவந்து, அவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
முன்னாள் காதலி தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவித்தபோது, அந்த நபர் அதை ‘அபத்தமானது’ என்று கூறி உதறித் தள்ளியுள்ளார். நீதிமன்ற விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பிக்கையைத் துரோகம் செய்து மீண்டும் மீண்டும் இக்குற்றத்தைச் செய்ததாகக் கூறி, அந்த நபருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
