பொங்கல் பானையிலிருந்து கிளம்பிய புகை… அடுத்த நொடியே நடந்த ‘கொடூர’ ட்விஸ்ட்.. 25 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி… திருவிழாவில் சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பொங்கல் பானையிலிருந்து கிளம்பிய புகை… அடுத்த நொடியே நடந்த ‘கொடூர’ ட்விஸ்ட்.. 25 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி… திருவிழாவில் சோகம்..!!

Published

on

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மொண்டிக்குண்டு கிராமத்தில் உள்ள கன்னிமார் கோயிலில் நடந்த திருவிழா வழிபாட்டின் போது, கதம்ப வண்டுகள் கடித்ததில் 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு ஒன்றாகப் பொங்கல் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பொங்கல் பானைகளில் இருந்து எழுந்த அதிகப்படியான புகை மூட்டம், மலை அடிவாரப் பகுதியில் இருந்த கதம்ப வண்டுகளின் கூட்டை கலைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வண்டுகள் கூட்டமாக வெளியேறி, அங்கிருந்த பக்தர்களை நாலாபுறமும் விரட்டி விரட்டி கொட்டத் தொடங்கின.

கதம்ப வண்டுகளின் கொடூரத் தாக்குதலால் அலறியடித்து ஓடிய பக்தர்களில், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெருமாள் (42), கருப்பன் (40), சக்கரையம்மாள் (55), அஸ்வினி (20) ஆகிய நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து உத்தப்பநாயக்கனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in