அய்யய்யோ… புகார் கொடுக்க வந்த நபர் கழிவறையில் விபரீத முடிவு.. காவல் நிலையத்திற்குள் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்.. உசிலம்பட்டியில் உச்சகட்டப் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யய்யோ… புகார் கொடுக்க வந்த நபர் கழிவறையில் விபரீத முடிவு.. காவல் நிலையத்திற்குள் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்.. உசிலம்பட்டியில் உச்சகட்டப் பரபரப்பு..!!

Published

on

உசிலம்பட்டி அருகே நான்கு நாட்களுக்கு முன்பு ஏலக்காய் மூட்டைகளை ஏற்றி வந்த தனது லாரி தீப்பிடித்து எரிந்ததாகப் புகாரளிப்பதற்காக, பாலகிருஷ்ணன் என்பவர் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் அளித்த புகாரில் சந்தேகம் இருப்பதாகக் கருதிய போலீசார், அது குறித்து விசாரணை நடத்துவதற்காக அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து, காவல் ஆய்வாளர் அறையில் பாலகிருஷ்ணனை அமர வைத்துவிட்டு, லாரி தீப்பிடித்த சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காக போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

சிசிடிவி ஆய்வுகளை முடித்துவிட்டு போலீசார் மீண்டும் காவல் நிலையத்திற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, பாலகிருஷ்ணன் காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் அளித்த புகாரில் முரண்பாடுகள் இருந்ததால் போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனக் காவல்துறை தரப்பில் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புகாரளிக்க வந்த நபரே காவல் நிலையத்திற்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in