LATEST NEWS
FLASE: “லார்ட்ஸ் மைதானமே கடைசி…” கிரிக்கெட்டிற்கு குட்பை சொன்ன சாஹல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ரெட் பால் கிரிக்கெட் எனப்படும் நீண்ட வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விடைபெறுவதாகத் தெரிவித்துள்ள சாஹல், கடைசியாக கவுண்டி கிரிக்கெட்டில் நார்த்தாம்ப்டன்ஷயர் அணிக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியிருந்தார். 36 வயதான சாஹல், இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், உடற்தகுதியைக் கருத்தில் கொண்டும் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாகத் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த ஓய்வு முடிவு வெள்ளை நிற பந்து கிரிக்கெட் வடிவங்களுக்குப் பொருந்தாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் மீண்டும் தனது இடத்தைத் பிடிப்பதற்காக முழு உத்வேகத்துடன் தொடர்ந்து கடினமாக உழைக்கப் போவதாகவும், தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் சாஹல் உறுதியளித்துள்ளார். சாஹலின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களிடையேயும் கிரிக்கெட் உலகிலும் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
