கல்நெஞ்சம் கொண்ட தாய்..! நள்ளிரவில் 6 மாத பச்சிளம் குழந்தை உட்பட 2 குழந்தைகளை ரயில் நிலையத்தில் விட்டுத் தப்பி ஓடிய பெண்.. சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கல்நெஞ்சம் கொண்ட தாய்..! நள்ளிரவில் 6 மாத பச்சிளம் குழந்தை உட்பட 2 குழந்தைகளை ரயில் நிலையத்தில் விட்டுத் தப்பி ஓடிய பெண்.. சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் 2 சிறு குழந்தைகளைப் பெண் ஒருவர் அநாதையாக விட்டுவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறையில், சுமார் 6 முதல் 7 மாதமே ஆன ஆண் குழந்தையையும், ஒன்றரை முதல் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையையும் அப்பெண் விட்டுச் சென்றுள்ளார்.

பயணிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் , இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மருத்துவமனையில் குழந்தைகளுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இருவரும் ‘மாத்ருச்சாயா’ என்ற குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல் நிலைய பொறுப்பாளர் சுனில் குப்தா கூறுகையில், ரயில் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்வது பதிவாகியுள்ளது என்றார். இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குழந்தைகளை விட்டுச் சென்ற அந்தப் பெண்ணையும், குழந்தைகளின் குடும்பத்தினரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in