LATEST NEWS
“2 நாள்ல நடந்த மெகா ட்விஸ்ட் ” பெண் பார்க்க வந்த இடத்தில் வெடித்த லவ்..” மாப்பிள்ளை அப்பாவும், பொண்ணு அம்மாவும் ஓட்டம்… ஷாக்கில் உறைந்த இரு குடும்பங்கள்..!!
ம.,பி.,யில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மணமகளின் 45 வயது தாயும், மாப்பிள்ளையின் 50 வயது தந்தையும் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் பார்க்க வந்தபோது இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருவரும் போனில் பேசத் தொடங்கியதால் நெருக்கம் அதிகரித்து, இறுதியில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. திருமணத்திற்குத் தயாராக இருந்த தங்களது பிள்ளைகளை விட்டுவிட்டு பெற்றோர்களே ஓடிப்போன இந்த விநோத சம்பவத்தால் இரு குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
