LATEST NEWS
திருச்செந்தூர் கோயிலில் திடீர் பரபரப்பு..! வலிப்பு ஏற்பட்டு துடித்த பக்தர்… நொடியில் ஆம்புலன்ஸ் வரவழைத்து உயிரைக் காத்த அமைச்சர் ரமேஷ்..!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, கோயில் வளாகத்திற்கு வந்திருந்த பக்தர் ஒருவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைக் கவனித்த அமைச்சர் ரமேஷ், உடனடியாகத் தனது ஆய்வுப் பணியை நிறுத்திவிட்டு அந்தப் பக்தரிடம் விரைந்து சென்று அவரை மீட்டு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்தார்.
தொடர்ந்து, அங்கிருந்த ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அந்தப் பக்தரை உரிய சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைவாக அனுப்பி வைத்தார். பக்தரின் உயிரைக் காக்க அமைச்சர் காட்டிய இந்தத் துரித நடவடிக்கையும் மனிதநேயமும் அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தைப் பெற்றது.
