CRIME
“அவளையே திருமணம் செய்து கொள்கிறேன்…” காம கொடூரனின் வார்த்தையைக் கேட்டு கோர்ட் அறையிலேயே கதறி அழுத 14 வயது சிறுமி.. திடுக்கிடும் பின்னணி..!!
தந்தையை இழந்து, தாயுடன் சேர்ந்து உழைத்துத் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வந்த ஷைமா என்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அனைவரின் மனதையும் உலுக்குவதாக உள்ளது. சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரால் கடத்தப்பட்ட ஷைமா, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, அந்தக் கொடூரன் சிறுமியின் கண்களில் விரல்களை விட்டு அழுத்தியதில், சிறுமியின் கண்களில் உள்ள ரத்த நாளங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிறுமியின் வாழ்வைச் சிதைத்த அந்தக் குற்றவாளி, பாதிக்கப்பட்ட சிறுமியையே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளான். இதைக் கேட்டதும் அதிர்ச்சியும் பயமும் அடைந்த 14 வயது சிறுமி ஷைமா, நீதிமன்ற அறையிலேயே கதறி அழுது அலறிய சம்பவம் அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.
