LATEST NEWS
BREAKING: நூல் கொள்முதல் விவகாரத்தில் 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்.. தமிழக அரசு அதிரடி..!!
நூல் கொள்முதல் விவகாரத்தில் முறைகேடு புகார் எழுந்ததைத் தொடர்ந்து, நூலகத் துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அண்ணா நூற்றாண்டு நூலக அதிகாரிகள் காமாட்சி மற்றும் சந்தான கார்த்திகேயன், கலைஞர் நூற்றாண்டு நூலக அதிகாரிகள் தினேஷ்குமார் மற்றும் சந்தான கிருஷ்ணன் (பெரியார் நூலகப் பொறுப்பாளர்), மற்றும் பொது நூலகத் துறை அதிகாரி ஜூலியட் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
