CINEMA
பாலியல் புகார்: தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்திலிருந்து ஜானி சஸ்பெண்ட்…!!

ஆந்திர மாநிலத்தில் திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் ஒருவர் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது ஹைதராபாத் போலீசில் பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரித்த போலீசார் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது பலாத்காரம் ,கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடன இயக்குனர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடன கலைஞர்களே பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்பட துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.