CINEMA
நடிகைகளுக்கு மட்டும்தானா…? நடிகர்களுக்கும் பாதுகாப்பு கொடுங்க…. கொந்தளித்த நடிகர் ஆர்.கே சுரேஷ்…!!
மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டியின் அறிக்கை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சினிமா துறையில் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை சந்திப்பது உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடிகைகள் புகார் கொடுத்தால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
இதனையடுத்து பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். இந்நிலையில் நடிகைகளுக்கு மட்டுமல்ல நடிகர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ஆர்கே சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசிய அவர், திரைத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டால், சிலர் ஒப்புக்கொண்டு தான் ஒத்துழைத்திருக்கிறார்கள். அதையே பிறகு குற்றச்சாட்டாக கூறுகிறார்கள். நடிகர்கள் பல வருடங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய நல்ல பெயரை கெடுக்க சிலர் பொய் புகாரும் அளிக்கின்றனர் எனக் கூறியுள்ளார்