CINEMA
பாலியல் புகாரை ஊடகங்களில் சொல்ல வேண்டாம்…. நடிகை ரோஹிணி வலியுறுத்தல்…!!
பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என நடிகை ரோஹிணி கூறியுள்ளார். நேற்று நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது. அந்த நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய அவர், பாலியல் புகார்களை நடிகர் சங்கத்திடம் நேரடியாகவே அளிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் 2019-லேயே இது தொடர்பாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வழக்கறிஞர், என்ஜிஓக்கள் உறுப்பினர்களாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகாருக்குள்ளான குறிப்பிட்ட நபரின் குற்றம் உறுதியானால் அவருக்கு 5 வருடம் நடிக்க தடை விதிக்கப்படும் என்றார்