CINEMA
கல்வி நிறுவனங்களில் இசை வெளியீட்டு விழா நடத்தக்கூடாது…. இயக்குனர் அமீர் வலியுறுத்தல்..!!
கல்வி நிறுவனங்களில் இசை வெளியீட்டு விழா நடத்தக்கூடாது என்று திரைப்பட இயக்குனர் அமீர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்.
மேலும் திரைக் கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் கல்வி நிறுவனங்களில் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் இயக்குனர் அமீர் வலியுறுத்தியுள்ளார்.