ஏன் இவ்வளவு கேவலமான ரியாக்ஷன்…!அன்பு காட்டினா பிடிக்காதா? கணவரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்டை பார்த்து வரலட்சுமி செய்த விசித்திரமான காரியம்…!ஓப்பனாக போட்டுடைத்த சரத்குமார் மகள்…! – cinefeeds
Connect with us

CINEMA

ஏன் இவ்வளவு கேவலமான ரியாக்ஷன்…!அன்பு காட்டினா பிடிக்காதா? கணவரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்டை பார்த்து வரலட்சுமி செய்த விசித்திரமான காரியம்…!ஓப்பனாக போட்டுடைத்த சரத்குமார் மகள்…!

Published

on

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரைக் காதலித்துத் கரம் பிடித்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்ற போதிலும், இவர்களின் காதல் ஆழமானது என்பதைப் புரிந்து கொண்ட நடிகர் சரத்குமார் திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்டினார். தாய்லாந்தில் உறவினர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் சூழ இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இருவரும் மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வரும் சூழலில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவரிடம் தான் எப்படி நடந்து கொள்வேன் என்பது குறித்து வரலட்சுமி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

முன்னதாக வரலட்சுமி திரைத்துறைக்கு வந்த ஆரம்பகாலத்தில், அவரும் நடிகர் விஷாலும் காதலிப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், நடிகர் சங்கத் தேர்தலின் போது சரத்குமாருக்கும் விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அந்தக் காதல் பாதியிலேயே முறிந்துவிட்டதாகக் கோலிவுட்டில் ஒரு பேச்சு ஓடியது. இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான், அவர் நிக்கோலாயைக் காதலிப்பது உறுதியானது. திருமணத்திற்குப் பிறகும் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் வரலட்சுமி, கடைசியாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகமான ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அவர் இயக்கி, நடித்த ‘எஸ் சரஸ்வதி’ திரைப்படம் மற்றும் பல மொழிகளில் உருவாகியுள்ள ‘ரைசானா ஏ கேஜட் பேர்ட்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

Advertisement

வரலட்சுமியைப் பொறுத்தவரை எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதில் அசாத்தியமாகப் பொருந்திப் போகக்கூடிய ஒரு சிறந்த நடிகை என்று எப்போதோ பெயர் எடுத்துவிட்டார். இருப்பினும், அவருக்குரிய அங்கீகாரம் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் அவரது ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட குணம் குறித்துப் பேசிய வரலட்சுமி, “நான் ஒரு கடைக்குச் சென்றால், எனக்குத் தேவையான விஷயங்களை நானே சொந்தமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பேன், அதுதான் என் பழக்கம்” என்று தற்சார்புடன் வாழும் தனது குணத்தை விவரித்துள்ளார்.

மேலும் கணவர் கொடுக்கும் சர்ப்ரைஸ் பரிசுகள் குறித்துப் பேசிய அவர், “திடீரென எனது கணவர் எனக்கு ஏதேனும் கிஃப்ட் கொடுத்தால், என் முகம் ஒரு மாதிரி மாறிவிடும். உடனே அவர் ‘ஏன் இவ்வளவு கேவலமான ரியாக்ஷன் தருகிறாய்?’ என்று கேட்பார். அதற்கு நான் அவரிடம், ‘நீ கிஃப்ட் கொடுக்கும்போது என்னுடைய ரியாக்ஷனைப் பார்த்து ஃபீல் செய்யாதே; யாராவது அன்பு காட்டினால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது, எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, அதுதான் உண்மை’ என்று சொல்லிவிடுவேன்” எனத் தனது கணவருடனான சுவாரசியமான உரையாடலை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in