முதல்வர் விஜய்யுடன் காதல்..? என்னுடைய உணர்வை தான் சொன்னேன்… முதல் காதல் குறித்த வனிதா ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

CINEMA

முதல்வர் விஜய்யுடன் காதல்..? என்னுடைய உணர்வை தான் சொன்னேன்… முதல் காதல் குறித்த வனிதா ஓபன் டாக்..!!

Published

on

சமூக வலைதளங்களில் தனது முதல் காதல் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகை வனிதா விஜயகுமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, “தனது முதல் காதலைப் பற்றிச் சொன்னால் தமிழ்நாடே அதிரும்” என்று அவர் ஒரு கருத்தைப் பகிர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் குறிப்பிட்டது தமிழக முதல்வர் விஜய்யைத்தான் என்று சமூக வலைதளங்களில் பலரும் அவரை இணைத்து காதல் கிசுகிசுக்களைப் பரப்பத் தொடங்கினர்.

Advertisement

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை வனிதா வதந்திகளை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: தனது கருத்து சமூக வலைதளங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, தவறான முறையில் பரப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.”நான் என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளை மட்டுமே கூறினேன், ஆனால் நீங்களாகவே தவறாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள்” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in